வெரொனிக் கூல்ஸ் (Veronique Cools), வயது 25, இஸ்லாத்தை ஏற்ற பெல்ஜியம் பிரஜை (Belgium), 8 வருடங்களில் 1000 பேர் இஸ்லாத்தை ஏற்க உதவியுள்ளார்.
தனது முஸ்லிம் நண்பர்களின் செல்வாக்கினாலும் சுயமாக ஆராய்ந்து கற்றதன் விளைவாகவும் மிக இளம் வயதில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரி கூல்ஸ் தனது வீட்டை இஸ்லாத்தைக் கற்க விரும்பும் பெல்ஜியம் முஸ்லிம்களுக்கான 'இஸ்லாமிய நிலையமாக' மாற்றியுள்ளார்.
இஸ்லாம் பற்றிய பிழையான கருத்துக்களை நிவர்த்திசெய்ய வேண்டியுள்ளதைச் சுட்டிக் காட்டும் சகோதரி கூல்ஸ், "இஸ்லாத்தை சரியாக அறிமுகம் செய்யாமையினால்தான் தப்பபிப்பிராயங்கள் தோன்றுகின்றன" எனக் கூறுகின்றார். "முஸ்லிம்கள் என்ற வகையில் எம்மைப் பற்றி சமூகத்திற்கு நிறைய தெளிவுபடுத்த வேண்டியுள்ளது" என்று, நோன்பு திறப்பதற்காக 'இஃப்தாருக்கு' வருகைத் தருவோருக்கான உணவுப் பொட்டலங்களைத் தயார்படுத்திற்கொண்டு கூறினார்.
கடந்த 8 வருட கால அழைப்புப் பணி (தஃவா)வின் பலனாக, தற்போது சகோதரி கூல்ஸின் நிலையத்தில் 1,000 அங்கத்தவர்கள் உள்ளனர். இவர்களில் அதிகமானவர்கள் பெல்ஜியம் பெண்களாவர். அங்கத்தவரல்லாத பெல்ஜியம் முஸ்லிம்களும் இந் நிலையத்திற்கு வருகை தந்து பயன்பெறுகின்றார்கள்.
பெல்ஜியத்தின் 10 மில்லியன் சனத்தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 450,000 ஆகும். இவர்களில் பெரும்பான்மையினர் மொரொக்கோ, துருக்கி, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆபிரிக்க வம்சாவளியினர் ஆவர். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ச் (Brussels) அமைந்துள்ள 77 உட்பட பெல்ஜியம் முழுவதும் 300 பள்ளிவாசல்கள் அல்லது வழிபாட்டு அறைகள் -prayer rooms- காணப்படுகின்றன.
மூலம்: Muslimvillage.com
தமிழில்: Hisham Hussain, Puttalam
நன்றி:The Puttalam Time


0 Comments