Subscribe Us

header ads

ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த 18 இஸ்ரேல் இராணுவத்தினரில் இருவர் அமெரிக்க படை வீரர்கள்

காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி மற்றும் தரைப்படை தாக்குதலுக்கு எதிராக ஹமாஸ் போராளிகள் தீவிரமாக போராடி வருகின்றனர்.
கடந்த 13 நாட்களாக நடைபெற்று வரும் இந்த போரில் ஹமாஸ் தரப்பில் நூற்றுக்கணக்கான போராளிகளும், இஸ்ரேல் தரப்பில் 18 ராணுவத்தினரும்  இதுவரை பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேல் ராணுவத்துடன் இணைந்து காஸாவுடன் சண்டையிட்ட 2 அமெரிக்க வீரர்கள் ஹமாஸ் படையினரால் கொல்லப்பட்டதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
பலியானவர்கள் அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியை சேர்ந்த மேக்ஸ் ஸ்டிய்ன்பெர்க்(24) மற்றும் புளோரிடாவை சேர்ந்த நிஸ்ஸிம் சியென் கர்மேலி(21) என்பது தெரிய வந்துள்ளது.
காஸா போரில் தனது மகன் பலியானதை மேக்ஸ் ஸ்டிய்ன்பெர்க்-கின் தந்தை ஸ்டுவார்ட் ஸ்டிய்ன்பெர்க் நேற்று உறுதிபடுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments