நாட்டின்
பெரும்பாலான கரையோரப்பகுதிகளில் இன்று (16) மழையுடன் காற்றின் வேகம்
அதிகரிக்க கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
தென்மேற்கு கரையோரமாக மணிக்கு 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும் இக்காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.
புத்தளத்திலிருந்து அம்பாந்தோட்டை வழியாக கொழும்பிலிருந்து காலி வரையான கிழக்கு கடலோர பிரதேசங்களில் மழையுடன் காற்று வீசலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இக் காற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானமாக செயற்படுமாறு வேண்டப்படுகின்றனர்.


0 Comments