Subscribe Us

header ads

மட்டில் சிக்கிய புதிய வகை மீன்

புதிய வகை மீனொன்று வாழைச்சேனை பிரதேச மீனவர்களால் பிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று வாழைச்சேனை வாவியிலிருந்து ஐம்பது கிலோ மீற்றர் தூரத்தில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற, முஹைதீன் பாவா நிஸார் என்பவரின் படகிலிருந்தவர்களே இப்புதிய வகை மீனைப் பிடித்து வந்துள்ளனர்.

கருப்பும், சாம்பல் நிறமும் கலந்த குறித்தமீன் 7.5 கிலோ கிராம் எடையும், நான்கு அடி நீளமும் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இது குறித்து பிரதேச கடற்றொழில் பரிசோதகருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், அவர்கள் மீனைப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லவுள்ளதாகவும் படகு உரிமையாளர் முஹைதீன் பாவா நிஸார் தெரிவித்தார்.

நன்றி:அத தெரண தமிழ்

Post a Comment

0 Comments