Subscribe Us

header ads

வடக்கில் மீள்குடியேற தடையாக உள்ள பிரச்சினையினை இனம்கானுமாறு அமைச்சர் றிஷாத் பணிப்பு





எஸ்.எச்.எம்.வாஜித்-

ன்று கைத்தொழில் மற்றும் வணிக துறை அமைச்சர் றிசாட் பதியுதின்க்கும் 1990 ஆண்டு யுத்தின் பின்பு புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் பள்ளிவாசல் நிர்வாகத்திற்குமான விசேட சந்திப்பு புத்தளம்.தில்லையடி அம்மார் மண்டபத்தில் 4.30 மணியலவில் இடம்பெற்றது.

இதில் அமைச்சர் தெரிவிக்கையில் வடக்கில் தற்போது முஸ்லிம்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார் அதே போன்று தற்போது முஸ்லிம்களின் மக்களின் வாக்குகளை இல்லாமல் செய்வதற்கு பல சதி திட்டங்களை சில தீய சக்திகள் சதி செய்து வருகின்றார்கள் இந்த முறை மன்னார் மறிச்சிகட்டி மற்றும் வவுனியா சாளம்பகுளம் போன்ற கிராமங்களில் முஸ்லிம்களின் வாக்கினை இல்லாமல் செய்ய பல வேலைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் பொது மக்கள் மீள்குடியேறுவதற்கு தடையாக உள்ள பிரச்சினைகளை இனம்கானுமாறு பள்ளிவாசல் நிர்வாகத்திடம் அமைச்சர் பணிவான வேண்டுகோழை விடுத்தார்.
இன் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் குனைஸ் பாருக்.வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதின்.கொழும்பு பல்கலைகழக அரசியல் பிட ஆசிரியர் அனிஸ்.முசலி பிரதேச சபை தவிசாளர் தேசமாணிய எஹியா மற்றும் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் சஹாப்தின் கலந்து கொண்டனர்.

நோன்பு திறப்பதற்காக ஏற்பாடுகளும் அமைச்சரினால் செய்து கொடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments