Subscribe Us

header ads

இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதமில்லை: ரொஹான் குணரட்ன.

இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதமில்லை என சிங்கபூரை தளமாகக் கொண்டு செயற்படும் பயங்கரவாத ஆராய்சி மற்றும் அரசியல் வன்முறை தொடர்பான சர்வதேச அமைப்பின் தலைவரும் பாதுகாப்பு ஆய்வாளருமான ரொஹான் குணரட்ன தெரிவித்தார்.எனினும் சில முஸ்லிம்கள் தங்களின் தனிப்பட்ட நலன்களுக்கான சில நாடுகளிலுள்ள பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவுகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.

எனினும் மதத்தையோ இனத்தையோ பிரதிபலிக்கும் வகையிலான முஸ்லிம் பயங்கரவாதம் இலங்கையில் இல்லை என அவர் கூறினார்.

தீவிரவாத போக்குடன் செயற்படும் பொதுபலசேனா அமைப்பினை இலங்கை தடை செய்ய வேண்டும் என பாதுகாப்பு ஆய்வாளர் ரொஹான் குணரட்ன தெரிவித்தார்.

குறித்த அமைப்பு தேசிய நீரோட்டத்தில் தங்களின் பணிகளை மேற்கொள்ளாது கல்வி அறிவு குறைந்த மக்கள் மத்தியிலேயே அதிக தாக்கத்தினை செலுத்துகின்றது என அவர் குறிப்பிட்டார்.

பௌத்த சமயத்தினை பின்பற்றும் குறைந்தளவாக மக்கள் மத்தியிலேயே இந்த அமைப்புக்கு ஆதரவுள்ளது என அவர் கூறினார்.
இனவாத பேச்சுக்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையிலான சட்டங்கள் நாட்டில் அமுல்படுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

லக்பிம சிங்கள பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலின் போதே பாதுகாப்பு ஆய்வாளர் ரொஹான் குணரட்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Post a Comment

0 Comments