நோன்புப் பெருநாளை கொண்டாடவிருக்கும் மக்கள் வங்கியின் முஸ்லிம் வாடிக்கையாளர்களுக்கு மக்கள் வங்கி விசேட கடனுதவி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அரசாங்க அல்லது தனியார் துறைகளில் கடமை புரியும் நிரந்த ஊழியர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கடனுதவித் திட்டத்தின் கீழ் ஒருவர் ஒரு லட்சம் ரூபா வரை கடனாக பெற முடியும். 14 வீத வட்டி அடிப்படையில் 12 மாதங்களில் மீளச்செலுத்தும் வகையில் இந்த கடன் வழங்கப்படும்.
ஒரு லட்சம் ரூபாவை ஒரே தடவையில் கடனாக பெறுவதாயின் அந்நபர், மாதாந்தம் 8978.71சதத்தை வங்கிக்குச் செலுத்த வேண்டும். ஒரு பிணையாளருடன் இந்த கடனுக்காக விண்ணப்பிக்கலாம்.
ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வரை மட்டுமே இந்த கடனுதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இந்த கடனை பெற விரும்பும் தகுதியானோர், அருகிலுள்ள மக்கள் வங்கி கிளைக்குச் சென்று மேற்படி கடனை பெற முடியுமென மக்கள் வங்கி தனது முஸ்லிம் வாடிக்கையாளர்களை கேட்டுக் கொள்கிறது.

ஆசிரியர் கருத்து: தகவலுக்காக மாத்திரம் பதியப்பட்டது.
0 Comments