Subscribe Us

header ads

தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை - முரளிதரன்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில் நான்தான் முடிவெடுக்க வேண்டும். அதனை ஊடகங்கள் நிர்ணயிக்க முடியாது.
இன்று இவ்வாறு இலங்கை அணியின் புகழ்பெற்ற நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.
அடுத்த வருடம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் முத்தையா முரளிதரன் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பாக நான்தான் தீர்மானம் எடுக்க முடியும். அதனை ஊடகங்கள் நிர்ணயிக்க முடியாது.
தேர்தலில் போட்டியிடுவது ஒன்றும் தவறில்லை. எனினும் நான் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை – என்று அவர் பதிலளித்தார்.
இதேவேளை முத்தையா முரளீதரன் கடந்த மேல் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக இதற்கு முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் அவர் மேல் மாகாண தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments