Subscribe Us

header ads

முஸ்லிம் தன்சலும் - பௌத்த இஃப்தாரும்


தன்சல:
எசல நோன்மதி (போயா) தினத்தை முன்னிட்டு இன்று (2014.07.13) குருவிட நகரின் முச்சக்கர வண்டி சங்கம் உட்பட சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து குருவிட நகரின் கடிகாரக் கோபுரம் அருகில் தன்சல் (அன்ன தானம்) வழங்கினர்.

குருவிட கடுமதியராவ பன்சலையில் சில் அனுஷ்டித்த சுமார் 500 பௌத்த பக்தர்களுக்கு பகல் நேர உணவு தானமாக வழங்கப்பட்டது.

இவ் அன்னதான நிகழ்வில் அனைத்து இனத்தவரையும் சேர்த்துக்கொண்டதன் மூலம் கௌதம புத்தர் போதித்த சமத்துவம், சகவாழ்வை செயல்பூர்வமாக முழு நாட்டுக்கும் காட்டப்பட்டதாக குருவிட முச்சக்கர வண்டி சங்கத்தினர் கூறுகின்றனர். 

இஃப்தார்:
குருவிட, ஹிக்கஸ்ஹேன ஜும்மா பள்ளிவாசலில் ரமழான் நோன்பு திறக்கும் நிகழ்வு பௌத்த, இந்து சமயத்தவர்களின் பங்கேற்றலுடன் நடைபெற்றது. 

மௌலவி அமீர்சதீன் மற்றும் அம்பலம்பிட்டிய ஞாணிந்த தேரர் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை, சகவாழ்வு, நல்லுறவு தொடர்பாக எடுத்துரைத்தனர்.

இலங்கை முஸ்லிம்கள், அரபு நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை செய்த வியாபாரிகளுக்குசிங்கள தாய்மார் ஈன்ற பரம்பரையினர் அன்றி வேறு நாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல என்றும் எடுத்துக் கூறினர்.

புத்தரின் போதனைகளையும் நபிகளாரின் வழிகாட்டல்களையும் மேற்கோள் காட்டி உரையாற்றிய மௌலவி அமீர்சதீன், பிரச்சினைகளுக்கான தீர்வு கலந்துரையாடல் அன்றி வன்முறை அல்ல என்று கூறினார்.

மூலம்: லங்காதீப (ලංකාදීප) 
 අපෙන් නිව්ස් வலைத்தளம்
தமிழில்: Hisham Hussain, Puttalam
Thanks: The Puttalam Times

Post a Comment

0 Comments