Subscribe Us

header ads

உடன்பிறப்புக்களின் உள்ளத்தில் இருந்து


රාවය (ராவய - சிங்கள பத்திரிகை), 06/07/2014 இதழ், SMS பகுதியிலிருந்து தெரிந்தெடுத்தவை...

(1) மனிதர்களை வெட்டுகின்ற, சொத்துக்களை அழிக்கின்ற, கடைகளைத் தீயிட்டு சாம்பலாக்குகின்ற, மிலேச்சத்தனமானவர்களோடு புத்த தர்மத்தில் இருப்பதை விட சமயம் சாராமல் இருப்பது நல்லது - (விஜேனாயக, பானந்துரை)

(2) ஞானசார தேரர் சீ ஐ டி க்கு வாக்குமூலம் கொடுத்துவிட்டு திரும்பிய வாகனத்தை கண்டதும் எமது கிராமங்களில் தானம் கொஞ்சமாவது கிடைக்காமல் கஷ்டப்படுகின்ற ஹாமுதுருமார் எந்தளவு மடையர்கள் என்று எண்ணத்தோண்றுகிறது. இவர்களா மக்களுக்கு உணமையான பௌத்த தர்ம வழியை காட்டுகிறார்கள் என்று? - (அருண ரணசிங்க)

(3) இராணுவ தளபதி சொல்கிறார் பாதுகாப்பு செயலாளருக்கும் பொது பல சேனாவுக்கும் தொடர்பில்லை என்று. அப்படியென்றால் கடந்த காலங்கள் பூராவும் பொது பல சேனா சட்டத்தை கையிலெடுத்தபோது சும்மா பார்த்துக்கொண்டிருந்தது என்ன........... க்கா? - (திசானாயக்க, மஹதம்மென்னாவ)

(4) இப்ப எங்கலுக்கு இருப்பது விளையாட்டு அரசனும், விளையாட்டு துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு அங்குமிங்கும் ஓடுகின்ற சின்ன பிளளைகள் கொஞ்சப் பேரும், விளையாட்டு பொலிஸ் ஒன்றும், காலையிலிருந்து இரவாகும் வரை விளையாட்டு காட்டுகின்ற ஊடகங்களும், விளையாட்டுக் கதைகள் சொல்லுகின்ற (பொலிஸ், இராணுவ) தொத்த பபாக்களும் தான். நாடு போன போக்கு - ( நாமல், பன்னிபிடிய)

(5) இந்த நாற்களில் பெரியவர் பொய் சொல்லுகிறவர்களைப் பற்றி விமரிசிப்பதை கேட்கும் போது கச்சையில் மலம் கழித்த கமரால மற்றவரை நாற்றமென்று காட்டிய சொன்ன கதைதான் நினைவுக்கு வருது - (பெந்தொட்ட)

(6) சமய தீவிரவாதத்துக்கு பயந்து பாகிஸ்தானிலிருந்து 1500 குடும்பங்கள் இலங்கைக்கு வந்துள்ளார்களாம். பாவம் இங்கே அப்படி இல்லை என்று யாராவது கொடுத்த கயிறை விழுங்கி இருப்பார்கள் - ( (ஹரின்)

(7) அலுத்கமவுக்கு தீ மூட்டி என்ன கிடைத்தது? மிருகத்தனமான திருப்தி மட்டும்தான். அந்த நெருப்பு எரிந்தது நாட்டுப்பற்றுக்காகவா இனவாததுக்காகவா என்பது எனக்கு தெரியாது. ஆனால் எரிந்து சாம்பலாகியது என்னவோ மனிதத்தன்மைதான் - (மரியம் ஷஹீதா, கண்டி)

(8) அஸ்கிரி மஹா நாயக்க தேரரே நான் இந்த முறை மாத்திரம் ஒரு கொலையை செய்கிறேன். அடுத்த முறை கட்டாயம் சில் எடுப்பேன். நாங்கள் அரிந்த புத்த தர்மத்தில் என்றால் பாவம். அதனால் மஹா ராஜாவிடம் சொல்லி ஏதாவது செய்து தர முடியாதா? (செனரத், கடவத்த)

நன்றி உறவுகளே....

தமிழில்: ஹாஜா சஹாப்தீன், புத்தளம்
நன்றி: The Puttalam Times

Post a Comment

0 Comments