Subscribe Us

header ads

(படங்கள் இணைப்பு) டொல்பின் வேன் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம்.

வவுனியா, நொச்சிமோட்டை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்ததுடன், மூவர் காயமடைந்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த டொல்பின் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மரணமடைந்தவரின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Post a Comment

0 Comments