புத்தளம்
மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று
(8) மாதம்பை கூட்டுறவு கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
புத்தளம் மாவட்டத்தில் தற்போது
மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும்
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் இக்
கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ பலல்ல,
அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, ராஜித் சேனாரத்ன, பீலிக்ஸ் பெரேரா, பியங்கர
ஜயரத்ன, பவித்ரா வன்னியாரச்சி, ஜகத் புஷ்மகுமார, ஜனாதிபதியின் செயலாளர்
லலித் வீரதுங்க, நிதியமைச்சின் செயலாளர் பேராசிரியர் பீ.பி ஜயசுந்தர
ஆகியோர் உட்பட முக்கிய பிரமுகர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
0 Comments