Subscribe Us

header ads

அல்குர்ஆனை ஞானசாரர் தூற்றிப் பேசியது உறுதியானது - தண்டனை விதிக்கப்படுமா..?

பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குர் ஆனை இகழ்ந்து கருத்துக் கூறியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமய விவகார பணிப்பாளர் இது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கையை இன்று கொழும்பு கோட்டை நீதிவானிடம் சமர்ப்பித்தார்.

அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது கலகொட அத்தே ஞானசார தேரர், குர் ஆனை இகழ்ந்து பேசியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இது தொடர்பான வீடியோ காட்சியையும் பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்துமாறு முஸ்லிம் விவகார பணிப்பாளரிடம் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

இதனையடுத்தே ஞானசாரர் குர் ஆனை இகழ்ந்து பேசியமையை பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments