அளுத்கம, பேருவளை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடயங்களை
அழிக்கும் வகையில் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக
கூறப்படும் செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லையென நீதியமைச்சர் ரவூப்
ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரின் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இப்பிரதேசத்தில் சகல சாட்சியங்களும், தகவல்களும் திரட்டப்பட்டிருப்பதாக
அந்தப் பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தனக்கு
அறிவித்திருப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
0 Comments