Subscribe Us

header ads

தேரருக்கு அப சரணய்...!

(நாகூர் ழரீஃப்)
 
நான் என்ற
மாயையுடன்
மக்களைக் குழப்பியடித்து
மாட்டிக் கொண்ட
தேரருக்கு அப சரணய்!

அமெரிக்காவும்
அவரை மனிதனாக
ஏற்றுக் கொள்ளாது
அதன் விஸாவையும்
மறுத்து விட்டபடியால்
தேரருக்கு அப சரணய்!

குற்றவாளிகள்
பட்டியலில்
குற்றப்பிரிவினரின்
விசாரனைகளில்
கூட்டில் ஏற்றப்பட்ட
தேரருக்கு அப சரணய்!

பொதுவாக பௌத்தர்கள்
பொது பலவை ஏற்காததால்
பொது மூதேவியாய்
தனிமைப்
படுத்தப்படப்போகும்
தேரருக்கு அப சரணய்!

முப்பதுக்கு மேற்பட்ட
பௌத்த அமைப்புக்களால்
குப்பை கூலங்களாக
கருதப்படும்,
கதறப் போகும்
தேரருக்கு அப சரணய்!

எனக்கு சேனாவுடன்
என்ன தொடர்பு?
இருந்தால் பதவியே
வேண்டாம் என்று
கோட்டாவால்
கோடை வாடப்போகும்
தேரருக்கு அப சரணய்!

நாளுக்கு நாள்
நாயாகிப்
பேயாகிப்
பிசாசியாய்ப்
பார்கப்படும்
தேரருக்கு அப சரணய்!

தனது தலைவரே
தன்னைக்
கைவிடப் போவதாய்
அச்சுறுத்தியதால்
அவதிப்படும்
தேரருக்கு அப சரணய்!

Post a Comment

0 Comments