Subscribe Us

header ads

முதல் நாள் ஆட்டம் நிறைவு; வலுவான நிலையில் தென்னாபிரிக்கா

முதல் நாள் ஆட்டம் நிறைவு; வலுவான நிலையில் தென்னாபிரிக்கா
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பமானது.
காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது
ஹசிம் அம்லாவின் தலைமையில் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி இன்றை முதல் நாள் ஆட்டநேர நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 268 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
தென்னாபிரிக்க துடுப்பாட்டத்தில் டீன் எல்கர் 103 ஓட்டங்களையும், எப் டூ பிளஸிஸ் 80 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் சுரங்க லக்மால் மற்றும் தில்ருவன் பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
தென்னாபிரிக்க டெஸ்ட் அணிக்கு ஹசிம் அம்லா தலைமைப் பதவி வகிப்பது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரவுள்ளது.

Post a Comment

0 Comments