அளுத்கமை மற்றும் தர்ஹா நகரில் ஜுன் 15 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் 10 பேர் உள்ளடங்களாக 400 பேரிடம் புலனாய்வு பொலிஸார் வாக்குமூலங்களை பெற்று கொண்டுள்ளனர்.
இன்னும் சுமார் 100 பேரிடம் வாக்குமூலங்களை பெறவுள்ளதுடன் அவற்றை சட்டமா அதிபரிடம் அனுப்பி, அவரிடமிருந்து ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை, பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொடே அத்தே ஞானசார தேரர் மற்றும் முஸ்லிம் மதத்தலைவர்கள், கிராம சேவையாளர்,சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் உட்பட பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

0 Comments