Subscribe Us

header ads

சமூக ஊடகத்தின் வலிமை! - தொழிநுட்பம் எனும் அருள் -



பலஸ்தினத்திலும், ஏனைய எல்லா இடங்களிலும் நடைபெறும் அட்டூழியங்களுக்கு தொழிநுட்பம் மறைமுக அருளாக உள்ளது.

குழந்தைகள் மற்றும் அப்பாவிகள் பயங்கரவாதிகளால் (இஸ்ரேலிய இராணுவம்) கொல்லப்படும் காட்சிகள் எமது உள்ளங்களை உருக்கி கண்ணீர் மல்கச் செய்தாலும், அவர்களின் மனிதாபமற்ற போக்கினை அறியாத ஏனையவர்களுக்கு அவற்றை தெரியப்படுத்துவதற்கும், இந்த கோர நிகழ்வுகளின் சூத்திரதாரிகள் யார் என்று வெளிப்படுவதற்கும் ஏதுவாக அமைகின்றன.

முஸ்லிம்கள் இந்த காட்சிகளை தமக்குள் பகிர்கின்றனர். ஆனால், ஹமாஸ் என்பது (பலஸ்தீனர்கள் உள்ளடங்களாக) ஒரு பயங்கரவாத இயக்கமாகவே சராசரி அமெரிக்க குடிமகனால் இன்னும் நோக்கப்படும் அதே வேளை, இஸ்ரேல் தற்காப்புக்காகவே போரிடுகின்றது என்றும் கருதுவதனை, முஸ்லிம்கள் உணர்வதில்லை.

முன்னணி அமெரிக்க ஊடகங்களால் காண்பிக்கப்படும் இந்த கற்பனைச் சித்தரிப்பு வலிதான ஆதாரங்களால் மாத்திரமே முறியடிக்கப்பட முடியும். அவற்றை புகைப்படங்களும், காணொளிக் காட்சிகளும் சிறப்பாக எடுத்தியம்புகின்றன. மூளைச் சிதறிய ஒரு சிறு குழந்தையின் சடலத்தையும், கடற்கரையில் விளையாடிய பிள்ளைகளின் இறந்த உடல்களையும் பார்க்கும் போது, இஸ்ரேல் இந்த 'பயங்கரவாதி'களை எதிர்த்தா களம் இறங்கியுள்ளதனை மனம் ஏற்க மறுக்கின்றது.

முதன் முறையாக நகைச்சுவைக் கலைஞர்கள், பாடகர்கள், ஹாலிவுட் பிரபலங்கள் என்று இஸ்ரேலிற்கான எதிர்ப்பலை ஒன்று உருவாகியுள்ளதனை காணக்கூடியதாக உள்ளது. இந்தத் தொடரில் அரசியல்வாதிகள் ஈற்றிலேயே இணைவர்; காரணம் AIPAC (அமெரிக்க இஸ்ரேல் நல்லுறவு இயக்கம்) மற்றும் ஏனைய இஸ்ரேல் ஆதரிப்பு நிறுவனங்கள் அவர்களின் அரசியல் செலவீனங்களைக் கவனிக்கின்றனர். என்றாலும் அரசியல்வாதிகள் கூட ஈற்றில் (சிவில் உரிமைகள், மற்றும் ஏனைய விடயங்களுக்கு அவர்கள் வேண்டா வெறுப்புடன் வந்ததைப் போன்று) இணைந்தே ஆக வேண்டும்.

ஆகையால், சமூக ஊடகங்களின் வகிபாவத்தை துச்சமாகக் கருத வேண்டாம் என முஸ்லிம்கள் யாவரையும் கேட்டுக் கொள்கின்றேன். உங்களது Facebook, Instagram மற்றும் Twitter ஆகியவற்றில் பிரயோசனமான செய்திகள், காட்சிகள், மற்றும் காணொளிகளை பதிவிடுங்கள்.

இவ்வாறு, Fox News, CNN, ABC, BBC மற்றும் அவர்களுடன் இருக்கும் ஏனைய எல்லா குழுக்களையும் மிஞ்சி நாம் அல்லாஹ்வின் உதவியுடன் மிகப்பெரிய பலமுள்ள அமைப்பாக பிரதிபலிக்க முடியும்.

Dr. Yasir Qadhi (அமெரிக்காவைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர், அழைப்பாளர்)

தமிழில்: Mohammed Mafaz
நன்றி:The Puttalam Times


Post a Comment

0 Comments