Subscribe Us

header ads

புத்தளத்தில் இருந்து அலுத்கமைக்கு அன்புடன்! அலுத்கம மக்களுக்காக சேகரிக்கப்பட்ட நிதி -

TPT Media
அலுத்கம, பேருவலைப் பகுதிகளில் நடத்தப்பட்ட இன வன்முறைத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, புத்தளம் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ரூபா 893,052/= க்குப் பெறுமதியான காசோலை, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வங்கிக் கணக்கில் இன்று (2014.07.21) ஆம் திகதி வைப்பு செய்யப்பட்டது.

புத்தளம் பெரியபள்ளிவாசலின் ஏற்பாட்டில் புத்தளம் மக்களும் - குறிப்பாக வாலிபர் அணிகளும் இணைந்து - மேற்கொண்ட ஊர் தழுவிய நிதி வசூலிப்பில் திரட்டப்பட்ட பணமும் பெரியபள்ளிவாசலில் நேரடியாக வந்து ஒப்படைக்கப்பட்ட பணமும் இத் தொகையில் அடங்குகின்றது என பெரியபள்ளியின் நிருவாக சபைத் தலைவர் அல்ஹாஜ் எஸ்.ஆர்.எம். முஸம்மில் The Puttalam Times க்குத் தெரிவித்தார்.

மேலும், சுவிஸ் நாட்டில் வாழும் முஸ்லிம்களினால் திரட்டப்பட்ட ரூபா 22 இலட்சம் அ.இ.ஜ.உ. புத்தளம் மாவட்டக் கிளைத் தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் ஊடாக அ.இ.ஜ.உ.வுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும், இத் தொகையும் புத்தளம் மக்களின் அன்பளிப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இப் பணத் தொகையைப் பயன்படுத்தி முற்றாக சேதமாக்கப்பட்டதால் தற்போது தொழில் இழந்துள்ள மோ.சைக்கிளில் சுய தொழில் செய்தவர்களுக்கும் முச்சக்கர வண்டியை ஜீவனோபாயமாக நடத்தியவர்களுக்கும் முன்னுரிமை வழங்குமாறு, புத்தளம் மக்கள் சார்பாக அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் விடுத்த வேண்டுகோளை Aluthgama Development Foundation (ADF) ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

'2025 இல் அலுத்கம' எனும் தொணிப் பொருளுடன், அலுத்கம மீள் கட்டுமாணப் பணிகளை ஒருங்கிணைத்து முன்னெடுப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள ADF உடன் இணைந்து அரச, நிர்வாக மற்றும் ஏனைய நிறுவனங்கள் செயல்படுகின்றன.
பாதிக்கப்பட்ட அலுத்கம, பேருவல மக்களுக்காக நிதியன்பளிப்பு செய்தவர்கள் ஊர் தழுவிய நிதி சேகரிப்பில் பங்களிப்பு செய்த வாலிபக் குழுக்கள் அனைவருக்கும் அ.இ.ஜ.உ. சார்பிலும் புத்தளம் பெரியபள்ளி நிருவாகத் தலைவர் நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.


Post a Comment

0 Comments