பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவுடன் மோதலில் ஈடுபட்டமை
தொடர்பில் நாட்டு மக்களிடம் மன்னிப்பை கோருவதாக வடமேல் மாகாண முதலமைச்சர்
தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றின்போது ஹரின் – தயாசிறிக்கு இடையில் அண்மையில் மோதல் இடம்பெற்றது.
இதன்போது தயாசிறி தம்மை தாக்க முனைந்ததாகவும் தாம் தற்பாதுகாப்பு கருதி
அவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்திருந்தார்.
எனினும் ஹரின் பெர்ணான்டோ தம்மை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தயாசிறி குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையிலேயே பொறுப்புள்ள அரசியல்வாதி என்ற வகையில் தாம் பொதுமக்களிடம் மன்னிப்பை கோருவதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

0 Comments