நாட்டில் தொடரும் மழையுடனான வானிலையால், ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா,
இரத்தினபுரி, கேகாலை, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மண்சரிவு
ஏற்படும் அபாயம் காணப்படுவதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு
அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில், தொடர்ச்சியாக மழை பெய்யும்
பட்சத்தில், மண்மேடு மற்றும் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம்
காணப்படுவதாக நேற்றிரவு 11 மணிக்கு விடுக்கப்பட்ட அறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை மற்றும்
அம்பகமுவ கொரலே பிரதேச செயலக பிரிவுகளிலும், கண்டி மாவட்டத்தின் அனைத்து
பிரதேச செயலக பிரிவிகளிலும் மண்சரிவு அபாயம் எச்சரிக்கை காணப்படுவதாக
தெரிவிக்கப்படுகின்றது.
கேகாலை மாவட்டத்தின் கேகாலை நகரம், தெரணியகல,
யட்டியாந்தோட்டை, புலத்சிங்கள, தெஹிஓவிட்ட மற்றும் ருவன்வெல்ல பிரதேச
செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி
மாவட்டத்தின் எகலியகொட, அலபான, கலவான, அயகம, இரத்தினபுரி, பெல்மடுல்லை,
பலாங்கொடை மற்றும் காவத்தை ஆகிய பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை, மதுகம,
பாலிந்தநுவர, வலல்லாவிட்ட, புலத்சிங்கள மற்றும் ஹொரணை ஆகிய
பிரதேசங்களிலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக இடர் முகாமைத்துவ
நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஹட்டனின் மழை தொடர்ச்சியாக பெய்துவருவதால், மண்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால்,
மக்களை எச்சரிக்கையுடனும், அவதானத்துடனும் இருக்குமாறு ஹட்டன் – டிக்கோயா
நகர சபையின் தலைவர் அழகமுத்து நந்தகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஹட்டனின்
காமினிபுர, சமனலகம, கேம்வேளி, நாலுபீளி, டிக்கோயா போன்ற பகுதிகளில் இந்த
அபாய எச்சரிக்கை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments