பிலிப்பைன்ஸ் நாட்டில் 94 உயிர்களை பறித்தும் சீற்றம் தணியாமல் சீனாவை தாக்கிய சக்தி வாய்ந்த ரம்மசுன் சூறாவளி புயலுக்கு 16
பேர் பலியாகினர்.
சீனாவின் தெற்கு கடலோரப் பகுதியில் உள்ள ஹைனன் தீவை மணிக்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய இந்த புயலால் அப்பகுதியில் வசித்த 7 பேர் பலியாகினர்.
அங்கிருந்து வியட்நாம் நோக்கி நகரத் தொடங்கி, போகும் வழியில் சீனாவின் குவாங்சி பகுதியையும் ரம்மசுன் புரட்டிப் போட்டதில் இங்கு வசிக்கும் மேலும் 9 பேர் உயிரிழந்தனர். இரு பகுதிகளையும் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
சீனாவின் 41 ஆண்டுகால வானிலை ஆய்வு மைய வரலாற்றில் இவ்வளவு வீரியமான புயல் தெற்கு பகுதியில் வீசியதில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 Comments