Subscribe Us

header ads

மலேசிய விமானத்தை தாக்கியது கிளர்ச்சியாளர்கள்: உக்ரைன்

உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் தொடர்பாக ரஷ்யா இராணுவ அதிகாரி மற்றும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பேசிக் கொள்ளும் ஓடியோ பதிவை உக்ரைன் அரசு வெளியிட்டுள்ளது.விமான விபத்து நிகழ்ந்து 20 நிமிடங்களுக்கு பிறகு இருவரும் தொலைபேசியில் பேசிக் கொள்கின்றனர். அதில் கிளர்ச்சியாளர் ஒருவர் நாங்கள் தற்போது ஒரு விமானத்தை வீழ்த்தினோம். அதில் 200 பேர் பயணித்தனர் என கூறினார்.

மேலும் இது நூறு சதவீதம் பயணிகள் விமானம் எனவும் எவ்வித ஆயுதங்களும் இதில் கிடைக்கவில்லை எனவும் கூறுகிறார்.

அடுத்ததாக கிளர்ச்சியாளர்கள் பேசிக் கொள்ளும் மற்றொரு ஆடியோ பதிவையும் உக்ரைன் அரசு வெளியிட்டுள்ளது. அதில், மலேசிய விமானம் என தொலைகாட்சியில் கூறுகிறார்கள். அது உக்ரைனில் என்ன செய்கிறது எனவும் போர் நடைபெறும் போது இந்த விமானம் அங்கே பறந்திருக்க கூடாது எனவும் பேசுகிறார்கள்.

விமானம் மீது தாக்குதல் நடத்தியது யார் என்ற சர்ச்சை முற்றிவரும் நிலையில் உக்ரைன் அரசு வெளியிட்டுள்ள இந்த வீடியோ பதிவு, ரஷ்யாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இப்படியான பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எமது page ஜ like பன்னுங்கள்

Post a Comment

0 Comments