அமெரிக்காவில், நீண்ட காலமாக சிகரெட் பிடித்த தன் கணவர், புற்றுநோயால்
உயிரிழந்ததையடுத்து, சிகரெட் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்த பெண்ணுக்கு
13 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, புளோரிடா மாகாண நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
கணவர், மைக்கேல் ஜான்சன் சீனியர் என்பவரை
புற்றுநோய் காரணமாக இழந்த அவரின் மனைவி, சிந்தியா, தன் மனுவில், ‘சிகரெட்
நிறுவனம் தன் சிகரெட் விளம்பரத்தில், புகைபிடித்தால் புற்றுநோய் வரும் என
சரியான படி விளம்பரம் செய்யவில்லை. புற்றுநோயின் பாதிப்புகள் குறித்து,
அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தாததால் தான் என் கணவர் இறந்தார்’ என,
முறையிட்டிருந்தார்.
அதை ஏற்ற நீதிமன்றம், குறித்த சிகரெட் நிறுவனம்
பாதிக்கப்பட்ட சிந்தியாவுக்கு, 13 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க
வேண்டும் என, உத்தரவிட்டது.
இது தான், அமெரிக்க வரலாற்றில் அதிக
இழப்பீடு உத்தரவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மேல் முறையீடு
செய்யப்போவதாக, சிகரெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


0 Comments