Subscribe Us

header ads

பிரதமரிடம் இருந்து பறிக்கப்படுகிறது பௌத்த சாசன, சமய விவகார அமைச்சு!

பௌத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சு ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட உள்ளதாக, சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பௌத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சு தற்போது பிரதமரின் கீழ் இயங்கி வருகின்றன. அண்மைக் காலமாக நாட்டில் இடம்பெற்று வரும் மத முரண்பாடுகளையும், மதங்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை ஆகிய காரணிகளை கருத்திற் கொண்டும் அமைச்சுப் பதவியை மீளப் பெற்றுக் கொள்ள ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
  
பிரதமரின் செயலாளர் ஒருர் எதனோல் கொள்கலன் ஒன்றை இறக்குமதி செய்ய கடிதமொன்றை வழங்கியிருந்தமைக்கு பௌத்த பிக்குகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். இந்த காரணிகளினால் அமைச்சுப் பதவியை ஜனாதிபதியே பொறுப்பேற்றுக் கொள்ளத் தீர்மானித்துள்ளார். இதேவேளை, பௌத்த சாசன மற்றும் சமய விவகார பிரதி அமைச்சுப் பதவி பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments