Subscribe Us

header ads

நாம் காக்கமறந்த எமது வளங்களில் ஒன்று கடலோர தாவரங்கள்... இன்று பாலைவனகளில் பாதுகக்கப்டுகிறது.

எதுவித பயனுமில்லாத தரிசு நிலங்களாக நமது மக்களால் பார்க்கப்பட்டு அழிக்கப்பட்ட நிலையில் இருக்கும் ஒரு தாவரத்தின் முக்கியத்துவம் பற்றியும் அதனை பாதுகாப்பதற்கு இந்த உலகம் எடுத்துவரும் முயற்சிகளையும் பற்றியே நாம் இங்கு பகிர வந்துள்ளோம். இதற்கான காரணம் எமது தொண்டர்கள் பங்குபற்றிய ஒரு நிகழ்வு தான். கடந்த வெள்ளிக்கிழமை பல்வேறு நாடுகலில் இருந்து வந்த சுமார் 400 க்கும் மேற்பட்ட இயற்கையை பாதுகாக்கும் மனமுடைய நபர்கள் “கட்டார் லுசையில் Qatar Lusail” எனப்படும் பகுதியில் இருக்கும் சதுப்பு நில மரங்களை சுத்தம் செய்யும் முயற்சியில் இறங்கி இருந்தார்கள். அவர்களோடு சேர்ந்து சுத்தம் செய்யும் போது எங்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறோம்.

எந்த பிரயோசனமும் இல்லாத தரிசு நிலம் என்று நமது மக்களால் நினைக்கப்படும் இந்த சதுப்பு நில மரம் பல ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சியின் மூலம் “இந்த கிரகத்தில் இருக்க வேண்டிய மிக முக்கியமான மரம்” என பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்த சதுப்பு நில மரங்கள் கடலோர சுற்றுச்சூழலிலே வளரக்கூடியது. உலகிலேயே சதுப்பு நிலத்தில் வளரக்கூடிய ஒரே ஒரு தாவரம் இது என குறிப்பிடலாம். இது மனிதர்களின் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் வலமாக இருக்க உதவுகிறது. இந்த மரங்களிடமிருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் இருக்கின்றன. இந்த மரங்கள் தான் கடலையும் நிலத்தையும் இணைக்கும் ஒரே ஒரு மரம். இதனால் தான் நிலங்கள் கடலால் ஆக்கிரமிக்கப்படாமலும், கடல் நிலத்தால் ஆக்கிரமிக்கப்படாமல் சமநிலையில் இருக்கிறது. இயற்கையின் சமநிலை குழம்பாமல் இருக்க முக்கிய காரணம் இது எனலாம். இந்த மரம் "கடல் வேர்கள்" என ஆய்வாளர்களால் அழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
சதுப்பு நிலக்காடுகள் உலகின் வெப்ப மண்டல பகுதிகளில் உள்ள கடலோரங்களிலேயே வளரக்கூடியவை. ஆரோக்கியமான சதுப்புல மரங்களின் வளர்ச்சியே ஆரோக்கியமான கடல் வாழ் உயிரங்களுக்கான திறவுகோள். இந்த மரத்தில் இருந்து விழும் இலைகள், கிளைகள் மற்றும் கழிவுகள் கடலுக்கு ஊட்டச்சத்து என்று கூறலாம். கடலில் இருக்கும் உயிரினங்களின் வாழ்க்கைக்கு தேவையான உணவு என்று கூறினாலும் ஐயமில்லை. இந்த மரங்களால் கடற்பசுக்களில் (manatees), நண்டு தின்னும் குரங்குகள் (crab-eating monkeys), மீன்பிடி பூனைகள் (fishing cats) , பாம்புகள் (snakes), பல்லிகள் (monitor lizards), கடல் ஆமைகள் (sea turtles), ராயல் பெங்கால் புலிகள் (Royal Bengal tigers), மண் கேப்டன் மீன் (mud-skipper fish) போன்ற விலங்குகள் நேரடி பயனைப் பெறுகின்றன. அதுமட்டுமல்லாமல் இந்த மரங்கள்  இளம் மீன், நண்டுகள், இறால்கள், மெல்லுடலிகள், மற்றும் பிற முதுகெலும்பில்லாத விலங்குகள் போன்றவற்றுக்கு அடைக்கலம் கொடுக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. அத்தோடு 500 இற்கும் மேற்பட்ட நெடுந்தூரம் பறக்கும் பறவைகள் ஓய்வெடுக்கும் இடமாகவும், புலம் பெயரும் பறவைகளின் தற்காலிக உறைவிடமாகவும் இருக்கிறது.
இந்த மரங்களால் கடல் நீரோட்டத்தில் நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பதார்த்தத்தை தெளிக்கிறது அதன் மூலம் கடலில் இருக்கும் உயிரினர்களுக்கு சுவாசம் தேவையான அளவு கிடைக்கிறது. அது மட்டும் இல்லாது மனிதர்கள் புயல் காற்றுகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும் மண் அரிப்பில் இருந்து தப்பிக்கொள்ளவும், சுவையான உணவுகளை பெற்றுக்கொள்ளவும், நோய்களுக்கான மருந்துகளை பெற்றுக்கொள்ளவும் உதவியாக இருக்கிறது. மிக முக்கியமான ஒன்றாக கார்பன் டைஒ ஒக்சைடு அந்த தாவரத்தில் படிவதால் உலக வெப்பமயமாதல் விளைவுகளை குறைக்கும் சக்தியும் இந்த மரத்திற்கு உள்ளது.
இப்படி நமது சூழலில் பெரிய ஒரு சமநிலையை அழகாக பேணி வருவதற்கு இந்த தாவரங்கள் பெரிதும் பங்களிப்பு வழங்குகிறது. இந்த மரங்கள் புத்தளத்தில் தில்லடி முதல் காற்றாடி மின்சாரம் அமைந்திருக்கும் இடம் வரை இருந்திருக்கிறது. மக்களின் குடியேற்றம் மற்றும் அறியாமையின் காரணமாக பல இடங்களில் அது அளிக்கப்பட்டது. இது அளிக்கப்பட்டதனால் கடலை நம்பி தொழில் செய்வோர் மற்றும் கடலை அண்டி வாழ்வோரின் வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. கடலில் மீனின் பெருகுதல் குறைந்து போக காரணம் இது நேற்று கூறலாம். அத்தோடு இயற்கையை அழகுபடுத்தும் பல்வேறுபட்ட பறவைகள் விலங்குகள் எமது பிரதேசத்தை அழிந்து இருக்கின்றன.
இந்த மரத்தின் பயன்களில் வெறும் 40% மட்டுமே நாம் கூறியிருக்கிறோம். புத்தளத்தில் இருக்கும் இந்த தாவரத்தின் விஷேட தன்மைகள் மற்றும் அதன் விஷேட பயன்களை நாம் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும். இது சம்பந்தமாக உங்களுக்கு தெரிந்து இருந்தால் அதனை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். அல்லது இது போன்ற ஊடங்களுக்கு எழுதுங்கள். மக்கள் தெளிவு பெறுவதால் நமது சூழலையும் நமது இயற்கை பொக்கிஷங்களையும் அழகாக பாதுகாத்துக்கொள்ளலாம்.
நமது சதுப்பு நிலா மரங்களை சுத்தம் செய்வோம்; பாதுகாப்போம்; பயன் பெறுவோம்!
Silent Meida 






Post a Comment

0 Comments