Subscribe Us

கற்பிட்டி வாழ் மக்களே! வதந்திகளை நம்ப வேண்டாம்......

கற்பிட்டியில் இன்றும் , நாளையும் கடையடைத்து ஹர்த்தால் அனுஷ்டிக்கப்போவதாக பொய்யான தகவல்கள் முகநூலில் தற்போது வலம் வந்து கொண்டிருக்கின்றது. 

இது தொடர்பாக பெரியபள்ளி தலைவர் சகோ. சாஜாகான் அவர்களை கற்பிட்டியின் குரல் சார்பாக தொடர்பு கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார். "நேற்று கற்பிட்டி பொலீஸார் பள்ளி தலைவர்களையும் , பௌத்த குருமார்களையும், கிறிஸ்த்தவ மத குருமார்களையும் அழைப்பபு விடுத்து சுமார் 01.30 மணியிலிலருந்து 04.00 மணி வரை பொலீஸ் கேட்போர் கூடத்தில் ஹர்த்தால் நடாத்துவது சம்பந்தமாக கலந்துரயடினர். அதில் மூவின மத குருமார்களும் எமது ஊரில் எல்லோரும் ஒற்றுமையாகத்தான் இருக்கின்றோம் . ஹர்த்தால் என்று ஒன்று தேவையில்லை பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்மால் முடிந்த உதவிகளை செய்வோம் என்று கூறி கூட்டத்தின் இறுதியில் இவ்வாறு இணக்கப்பட்டுள்ளனர்.

 ஆனாலும் கற்பிட்டியில் நாளை தொழுகை முடிந்ததும் ஆர்ப்பாட்ம் செய்ய போவதாக கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர். இளைஞர்களே! பெரியோர்களே! ஆர்ப்பாட்டம் ஹர்த்தால் என்று செய்வதிலும் பார்க்க பாதிக்கப்பட்ட எமது உடன் பிறப்புகளுக்கு எம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். சில நேரங்கள் இனவாத சக்திகள் பிரச்சினைகளை தூண்டக்கூடும் எனவே சற்று அவதானமாக இருங்கள்.

எவ்வித பிரச்சினைகளும் வராமல் பாதுகாப்பதாக கற்பிட்டி பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

5 Comments

  1. ஹர்த்தால் இனவாதம் இல்லை உரிமை நீங்கள் கொண்டு போய் கொடுக்கும் வரை அங்கு யாரும் பட்டினி இல்லை ஆகக்குறைந்து உங்கள் ஒரு நாளை அவர்களுக்காக முஸ்லிம்களை இனி சீண்ட வேண்டாம் என கூறுவதற்காக ஹர்த்தால் தேவை முதுகு எலும்பு இல்லாத தலைகளை வைத்தால் இதுதான் நடக்கும் நாளை கற்பிட்டியில் அடித்தால் மத்த ஒர்ர்வாசிகள் இதே போல் பார்த்து கொண்டு நிற்பார்கள் அப்போ தெரியும் கொஞ்சம் மனுசனா சிந்தியுங்கள் அரசியல் லாபம் தேடி ஹர்த்தால் வேண்டாம்னு போலீஸ் சொல்லும் அதற்காக நாம் விடுவதா போன்னயர்கள் போல் வாழாமல் மனுசனா முஸ்லிமா வாழுங்க கல்பிட்டி தொலங்கும் ....

    ReplyDelete
  2. நண்பரே! ஹர்த்தாலுக்கு உத்தியோகபூர்வ பூர்வா ஏற்பாடு இல்லையென்றால் என்ன, தலைவர்கள் முதுகெலும்பு இல்லாமல் செயற்பட்டால் என்ன நாம் முதுகெலும்புடன் செயற்படுவோம் ( இன்ஷா அல்லாஹ்) நாளை கடைகள் திறக்கட்டும், நாம் யாரும் கடைகளுக்கு செல்லாமல் தவிர்போம், பொருட்கள் வாங்குவதை தவிர்ப்போம் ( இதில் வெள்ளிக்கிழமை விஷேட வியபர்களுக்கு அரிய படுத்துவது நல்லது – அவர்களை நட்டத்திலிருந்து காக்க உதா: இறைச்சி , மரக்கறி வியா) வங்கிகள் திறக்கட்டும் நாம் எமது வாங்கிச்சேவைகளை புறகணிப்போம், பாடசாலைக்கு பிள்ளைகளை ஒருநாள் அனுப்பாமல் வீட்டில் நிறுத்துவோம், சகல வர்த்தக நடவடிக்கைகளில் இருந்தும் விலகி நாளை மட்டும் செயற்படுவோம். வியாபாரிகள் கடை அடித்தால் தான் ஹர்த்தாலோ, ஆர்பாட்டமோ அல்ல நாங்களும் செய்யலாம். முயற்சிகள். ஹர்தலை விரும்பும் நண்பர்கள் இன்றே செயத் படுங்கள் அனைவருக்கும் நாளைய செயற்பாடுகளை புறகணிக்க தூண்டுங்கள். எம்மால் முடிந்த எதிப்பை நாம் காட்டுவோம். எமது இரத்த பந்தகள் அங்கு தவிக்கும் போது நாமும் ஒரு நாள் ஒன்றுமில்லாமல் தவிர்த்து பார்போம்.
    நன்றி

    ReplyDelete
  3. "மூவின மத குருமார்களும் எமது ஊரில் எல்லோரும் ஒற்றுமையாகத்தான் இருக்கின்றோம் . ஹர்த்தால் என்று ஒன்று தேவையில்லை"

    Brother, This is not the problem of conflict of religious ideologies. I do not know what Christian priests were doing in that meeting. This is a matter of Crime against Islam and innocent Muslims. If Kalpitiya people isolate themselves from the rest of the muslim community, then there shall not be any guarantee that muslims living in the other parts will look in to Kalpitiya people's problem in the future. What if BBS thugs come to Kalpitiya to create problems. Allah save us.

    The other brother says that let somebody to open the shops and we shall boycott the shops. Who is the "somebody" and who are "we". As a muslim, If I have a shop, should I open or not. How to show my protest to this heinous crime by thuggery BBS and followers.

    Be united as muslim ummah!

    ReplyDelete
  4. ஹர்த்தால் என்றால் என்ன என்று தெரியாததால் தான் இந்த குழப்பம்.
    ஹர்த்தால் என்பது எங்களுக்கு நடந்த கொடுமைளை எதிர்த்த்து அமைதியாக எம்மால் முயன்ற அளவில் கண்டனத்தை வெளிப்படுத்த்துவதே ஹர்த்தாளின் நோக்காகும். இன்று அவர்களுக்கு நாளை ?????
    ஆயுதம் தூக்க கூறவில்லை எதிர்ப்பைத்தான் காட்ட சொல்லுகின்றோம். எங்களுடைய கிராமம் அதிகமாக முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியாகும் .நாமே இவ்வாறு இருந்தால் நாளை எங்களுக்கும் இதே நிலை தான் வரும்......சிந்தித்த்து செயல்படுங்கள்..

    ReplyDelete
  5. http://www.kalpitiyavoice.com/2014/06/blog-post_4875.html

    கற்பிட்டியில் நாளை ஹர்தால் அனுஷ்டிக்கப்பட உள்ளது.

    ReplyDelete