Subscribe Us

header ads

இன்று காலை முதல் தனது வீட்டுக்கு வரும் சகல வாகனங்கள் மற்றும் தனிநபர்கள் அனைவரையும் போலிஸ் சோதனை ….அசாத் சாலி

இன்று காலை முதல் தமது வீட்டுக்கு வரும் சகல் வாகனங்கள் மற்றும் தனிநபர்கள் அனைவரும் சோதனை செய்து வருவதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி சற்றுமுன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
 
 
"காலையில் இருந்து துப்பாக்கி ஏந்திய இரண்டு பொலிஸார் எனது வீட்டிற்கு அருகில் இருந்தவண்ணம், வீட்டிற்கு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனையிடுகின்றனர். வாகனங்களை நிறுத்தி, வாகனங்களின் இலக்கங்களை பெற்றுக்கொண்டு, தேசிய அடையாள அட்டையை சோதனையிட்டு, அசாத் சாலி வீட்டிற்கு எதற்காக வருகின்றீர்கள்? என்ன விடயம் என கேட்கின்றனர். இதற்காகத் தான் பொலிஸார் இருக்கின்றனர். கொலை செய்பவர்களை பிடிப்பதற்கு முடியாது. அளுத்கம, பேருவளை மற்றும் பானந்துறை ஆகிய நகரங்களை சேதப்படுத்தியவர்களை பிடிப்பதற்கு முடியாது, நாட்டில் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தி, அனைவரும் அமைதியுடன் இருக்க வேண்டுமென தெரிவிக்கும் எம்மிடமே வருகின்றனர். பொலிஸார் எவ்வாறான செயலை செய்கின்றனர் எனப் பாருங்கள். பொலிஸ் மாஅதிபருக்கு தொடர்புகொண்டேன். அவரது பிரத்தியேக செயலாளர் விடயத்தினை சொல்வதாக கூறினார். இதனை தெரியப்படுத்துவதற்காகவே, ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்தேன்."
 
 

Post a Comment

0 Comments