ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-
முஸ்லிம்களுக்கு இன்று
ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் அகில
இலங்கை மக்கள் காங்கிரஸ் அதன்
தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் தலைமையில் கடந்த வாரம் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேசியதாக ஒரு தகவல் சற்று நேரத்துக்கு
முன்னர் கிடைத்தது.
இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது மன்னாரில் தங்கியுள்ள
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களை தொலைபேசியில் சற்று நேரத்து முன்னர்
(இன்றிரவு 10.30) தொடர்பு கொண்டு கேட்டேன். அதற்கு அவர் இவ்வாறு என்னிடம்
பதிலளித்தார். ஆம், எமது கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச்
சந்தித்து முஸ்லிம்களின் சமகால நிலைமை தொடர்பில் எடுத்துக் கூறியது
உண்மையே. ஜனாதிபதியும் மிகுந்த அக்கறையுடன் எமது விடங்களை செவிமடுத்தார்.
பேச்சுவார்த்தை மிகுந்த சுமுக அமைந்திருந்து. என்றார்.
என்ன பேசினீர்கள் என்று அமைச்சரை நான் கேட்ட போது, இன்ஷா அல்லாஹ் நாளை (02)
கொழும்பு வந்தவுடன் உங்களைத் தொடர்பு கொள்கிறேன் என்றார். இந்த விடயத்தை
ஊடகங்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்று கேட்டேன். இன்ஷா அல்லாஹ் நாளை
சொல்கிறேன். எனறார்.


0 Comments