Subscribe Us

header ads

ஐபிஎல் 2014 தொடரில் கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் சம்பியன்

ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணி வெற்றி பெற்று, 2014ஆம் ஆண்டுக்கான சம்பியன் ஆகியுள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணி 3 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணி இரண்டாவது தடவையாக சம்பியன் ஆகியுள்ளது. 
 
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ரிதிமன் சஹா ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள், 8 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 115 ஓட்டங்களைப் பெற்றார். இந்த வருட தொடரில் பெறப்பட்ட மூன்றாவது சதம் இதுவாகும். மனன் வொஹ்ரா 67 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் பியூஸ் சவ்லா 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 
 
பதிலுக்கு துடுப்பாடிய கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மானிஷ் பாண்டி 50 பந்துகளில் 7 நான்கு ஓட்டங்கள், 6 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 94 ஓட்டங்களையும், யூசுப் பதான் 36 ஓட்டங்களையும், கெளதம் கம்பீர் 23 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கரன்வீர் சிங் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
 

 

Post a Comment

0 Comments