Subscribe Us

header ads

உலகின் அதிவேக பொது நெடுஞ்சாலை... ஆட்டோபான் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

அதிவிரைவான பாதுகாப்பான பயணத்தை அளிக்க வல்ல நெடுஞ்சாலைகளை சிறந்த கட்டமைப்புடன் உருவாக்குவதில் அனைத்து நாடுகளும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. ஆனால், உலகில் இன்றைக்கு அமைக்கப்படும் பல அதிவிரைவு சாலைகளுக்கு முன்மாதிரியாகவும், முன்னோடியாகவும் கருதப்படுவது ஜெர்மனியிலுள்ள ஆட்டோபான் அதிவிரைவு நெடுஞ்சாலை கட்டமைப்பு குறிப்பிடப்படுகிறது.
இந்த ஆட்டோபான் நெடுஞ்சாலை கட்டமைப்பு அமையப்பெறுவதில் ஜெர்மனியின் (சர்வாதிகாரி) ஹிட்லரின் பங்கும் முக்கியமானது. ராணுவ தளவாடங்களையும், படை வீரர்களையும் நாட்டின் எல்லைகளுக்கு விரைவாக அனுப்புவதுற்கு இந்த சாலைகள் அவசியம் என ஹிட்லர் கருதி இந்த சாலைகளை அமைப்பதில் தீவிரம் காட்டினா்ர.

1930ம் ஆண்டு இந்த சாலை கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் துவங்கியது. தற்போது உலகின் அதிவேக பொது பயன்பாட்டு அதிவிரைவு சாலை கட்டமைப்பும் இதுவாகவே கருதப்படுகிறது. தவிர, ஆட்டோமொபைல் பிரியர்கள் தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது ஜெர்மனியின் ஆட்டோபான் நெடுஞ்சாலையில் பயணிக்க விரும்புகின்றனர்.

கட்டுப்பாடுகள்

அதிவிரைவு சாலைக்கான கட்டமைப்பு வசதிகளை சேர்த்து இந்த சாலைகளில் பயணிப்பதற்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மற்றும் அபராதங்களை விதிக்கின்றனர்.



 மொத்த நீளம்
1935ம் ஆண்டு 108 கிமீ தூரத்துக்கு அமைக்கப்பட்ட ஜெர்மனியின் ஆட்டோபான் அதிவிரைவு சாலை கட்டமைப்பு தற்போது 12,845 கிமீ நீளம் கொண்டதாக மாறியிருக்கிறது. உலகிலேயே அதிக நீளம் கொண்ட சீனாவின் 97,355 கிமீ நீளம் கொண்ட அதிவிரைவு சாலை கட்டமைப்பு, அமெரிக்காவின் 75,932 கிமீ நீளம் கொண்ட அதிவிரைவு சாலைக் கட்டமைப்புகளின் பட்டியலில் சிறப்பான கட்டமைப்பையும் கொண்டதாக வர்ணிக்கப்படுகிறது.
 நோ ஸ்பீடு லிமிட்
இந்த சாலையில் வேகக்கட்டுப்பாடு கிடையாது. அதேநேரத்தில், பராமரிப்பு பணிகள், மோசமான சீதோஷ்ண நிலைகளின்போது குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டும் வேகக்கட்டுபாடு தற்காலிகமாக அமல்படுத்தப்படும். இந்த சாலையில் பயணிக்க 130 கிமீ வேகம் பரிந்துரைக்கப்பட்ட வேகமாக கடைபிடிக்கப்படுகிறது. மொத்த ஆட்டோபான் சாலைகளில் 33 சதவீத சாலைகளில் வேகக்கட்டுப்பாடு அமலில் உள்ளது. இதன் 15 சதவீத சாலைகளில் சீதோஷ்ண நிலை, பராமரிப்பு பணிகள் போன்றவற்றிற்காக தற்காலிக வேகக்கட்டுப்பாடு அமலில் இருக்கும். வாகனங்களை பொறுத்து வேகக்கட்டுப்பாடு அமலில் உள்ளது
 வாகன வகை வேகக்கட்டுப்பாடு
கார் மற்றும் மோட்டார்சைக்கிள்களுக்கு வேகக்கட்டுப்பாடு இல்லை. ஆனால், இருக்கை எண்ணிக்கைக்கு அதிகமான பயணிகளை ஏற்றி பஸ்களுக்கு 60 கிமீ வேகமும், டிரெய்லர்களுக்கு 80 கிமீ வேகமும், இருக்கை எண்ணிக்கைக்கு ஏற்ற அளவில் உள்ள பயணிகள் ஏற்றி பஸ்களுக்கு 100 கிமீ வேகக் கட்டுப்பாடும் கொடுக்கப்பட்டுள்ளது.
 நெடுஞ்சாலை எண்
நம்மூரில் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு எண் கொடுக்கப்பட்டுள்ளது போன்றே ஆட்டோபான் சாலைகளுக்கு பிரத்யேக எண்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏ10 முதல் ஏ99 வரையிலான எண்களில் அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பகுதியில் இருக்கும் ஆட்டோபான் அதிவிரைவு சாலைகளுக்கு குறிப்பிட்ட எண்களில் அழைக்கப்படுகின்றன. இதில் ஜெர்மனியின் தெற்கிலிருந்து மேற்கு பகுதியை இணைக்கும் ஏ5 மற்றும் கிழக்கு- மேற்கு பகுதிகளை இணைக்கும் ஏ8 ஆகிய ஆட்டோபான் நெடுஞ்சாலைகள் ஜெர்மனியின் முக்கிய ஆட்டோபான் சாலைகளாக குறிக்கப்படுகின்றன.
 4 வழிச்சாலை
இருவழித்தடங்கள் மற்றும் 4 வழித்தடங்கள் கொண்டதாக இருக்கின்றன. சில முக்கிய ஆட்டோபான் சாலைகளில் ஒரு பக்கத்திற்கு தலா 4 வழித்தடங்கள் மற்றும் அவசர கால வழித்தடத்துடன் ஆட்டோபான் அதிவிரைவு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.



அவசர தொடர்பு

வாகன ஓட்டிகளின் அவசர அழைப்பிற்காக இந்த நெடுஞ்சாலையில் 16,000 தொலைபேசிகள் வைக்கப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு 700 அழைப்புகள் வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஓய்விடங்கள்

இந்த நெடுஞ்சாலை கட்டமைப்பு முழுவதும் வாகன ஓட்டிகள் ஓய்வு எடுப்பதற்கான இடம் மற்றும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆட்டோபான் சாலைகளல் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்பது கட்டாய விதி. மேலும், ஓய்விடங்கள் மற்றும் எரிபொருள் நிலையங்கள் குறித்த பலகைகள் சாலைகளில் முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் வகையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

போக்குவரத்து அளவு

2012ம் ஆண்டு புள்ளிவிபரங்களின்படி ஜெர்மனியின் 31 சதவீத போக்குவரத்து தேவையை ஆட்டோபான் பகிர்ந்து கொள்கிறது. அதேபோன்று, ஜெர்மனியில் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் 11 சதவீதம் ஆட்டோபான் சாலைகளில் நிகழ்வதாக தெரிவிக்கப்படுகிறது.









Post a Comment

0 Comments