Subscribe Us

header ads

23 ம் திகதி ஸ்ரீ லங்கா தௌகீத் ஜமாத்தினர் கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ள கண்டன பேரணி பெரும்பான்மையினரின் சந்தேக பார்வையை உண்மைப்படுத்துவதாக அமையாதா?

SLTJ  இன் வாழ்வுரிமை போராட்டம் இன்றைய காலப்பொழுதில் பாதிப்பை ஏற்படுத்தாத்தா? -சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா
-எம்.வை.அமீர்-
முஸ்லிம்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து 23 ம் திகதி ஸ்ரீ லங்கா தௌகீத் ஜமாத்தினர் கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ள கண்டன பேரணியானது, இன்றைய சுழலில் பெரும்பான்மை சமூகத்தினர் முஸ்லிம்கள் மீது கொண்டுள்ள கொண்டுள்ள சந்தேக பார்வையை உண்மைப்படுத்துவதாக அமையாதா? என சிரேஷ்ட சட்டத்தரணியும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர் பீட உறுப்பினரும் பிரதேசசபை உறுப்பினருமான எஸ்.எம்.எம்.முஸ்தபா கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா: தீவிரவாத அமைப்புக்களால் பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில், முஸ்லிம்கள் விடையத்தில் உண்மைக்கு புறம்பான தவறான செய்திகள் விதைக்கப்பட்டுள்ள இன்றைய சுழலில், ஸ்ரீ லங்கா தௌகீத் ஜமாத்தினர் உண்மையை உலகுக்கு பறைசாற்ற திட்டமிட்டுள்ளது சரியானது என எடுத்துக்கொண்டாலும், சந்தேக கண்கொண்டு பார்ப்பவர் மத்தியில் சலசலப்பையே ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறித்தாக்குதல்கள் பிரதேசம் பிரதேசமாக விரிந்து செல்லும் இன்றைய சுழலில் SLTJ யினால் தலைநகரில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ள கண்டன நிகழ்வானது இன்னுமொரு முஸ்லிம் கிராமத்தையோ அல்லது வியாபார நிலையத்தையோ தாக்குவதற்கு அவர்களை துண்டுவதாக அமையக்கூடடாது என்றும் இந்த விடையத்தில் SLTJ யினர் மிகுந்த நிதான புத்தியுடம் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Post a Comment

0 Comments