Subscribe Us

header ads

மக்கா ஹரம் ஷரீபின் இமாம் வபாத்தாகவில்லை! அது எஸ்.எம்.எஸ். வதந்தி


மக்கா ஹரம் ஷரீபின் பிரதம இமாம் அஷ்ஷேக் அப்துர் ரஹ்மான் ஸுதைஸி கடந்த 24 ஆம் திகதி சனிக்கிழமை இரவு வபாத்தானதாக பரப்பப்பட்ட எஸ்.எம்.எஸ் ஒரு வதந்தியே என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாக உயர் மட்டக்குழு உறுப்பினர் மௌலவி தாஸீம் தெரிவித்துள்ளார். 
 இந்த செய்தியினால், பலரும் கவலை கொண்டனர். எம்மோடு, தொடர்பும் கொண்டனர். இது விடயமாக உடனடியாக மக்கா ஹரம் ஷரீபில் அல்குர்ஆன் மற்றும் இஸ்லாமிய நூல்கள் விநியோகிக்கும் பிரிவின் பொறுப்பாளர் அஷ்ஷேய்க் முகம்மது ரியால் முகம்மது ஸாதிஹான் என்பவருடன் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது, இது ஒரு பொய்யான செய்தி. அவர் நலமுடனே இருக்கின்றார் என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  (மு)


http://www.dailyceylon.com/index.php/2013-04-22-19-01-05/mainnews/item/6775



каталог музыкальнமக்கா ஹரம் ஷரீபின் பிரதம இமாம் அஷ்ஷேக் அப்துர் ரஹ்மான் ஸுதைஸி கடந்த 24 ஆம் திகதி சனிக்கிழமை இரவு வபாத்தானதாக பரப்பப்பட்ட எஸ்.எம்.எஸ் ஒரு வதந்தியே என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாக உயர் மட்டக்குழு உறுப்பினர் மௌலவி தாஸீம் தெரிவித்துள்ளார். 


Post a Comment

0 Comments