Subscribe Us

header ads

ஒரு தினசரிப் பத்திரிகையைக் கொண்டுவர வக்கில்லாத .

ஒவ்வொரு முஸ்லிமும் ஊடகவியலாளராக வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது. இலங்கை நாட்டின் அண்மைக் கால நிகழ்வுகள் இக்கருத்தை உண்மைப்படுத்துவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்தார். 
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் பாடசாலைகள் மட்டத்தில் நடாத்தி வரும் ஊடகத்துறை தொடர்பான செயலமர்வு  நேற்று சனிக்கிழமை வறக்காப்பொல பாபுல் ஹஸன் மத்திய கல்லூரியில் காலை 9.00 மணியளவில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் முஹமட் எம்.அக்ரம்  தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜனநாயகத்தின் பாதுகாவலனாக ஊடகத்துறை காணப்படுகின்றது. எமது நாட்டில் முஸ்லிம்கள் இந்த விடயத்தில் அக்கரை குன்றியவர்களாகவே உள்ளனர். எமது பெரும் வியாபாரிகள், அரசியல் வாதிகள் கூட இத்துறையின் முக்கியத்துவத்தை இன்னும் உணராதவர்களாகவே இருக்கின்றமை கவலைக்குரிய விடயமாகும். 
எமது நாட்டில் 49 வானொலி அலைவரிசை, தொலைக்காட்சி சேவைகள் 19, இன்னும் எத்தனையோ தினசரிப் பத்திரிகைகள் உள்ளன. எமது முஸ்லிம் சமூகத்துக்கு இருப்பது நவமணிப் பத்திரிகை ஒன்றுதான். அதனைக் கூட தினசரியாக கொண்டுவருவதில் பாரிய பிரச்சினைகளை முகம்கொடுக்கின்றோம். இது தான் இன்றைய எமது சமூகத்தின் நிலை. ஒரு தினசரிப் பத்திரிகையைக் கொண்டுவர வக்கில்லாத சமூகமாக எமது சமூகம் காணப்படுகின்றது எனவும் அவர் மேலும் தனதுரையில் குறிப்பிட்டார்.  (மு)

Post a Comment

0 Comments