முன்னேறி வரும் தொழில்நுட்பத்தை விளையாட்டு அமைப்புகளும் முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கி விட்டன.
பிரேசிலில் நடக்கவுள்ள 2014
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் பயன்படுத்தப்படவுள்ள பந்துகளில் ஆறு
எச்.டி கமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்று பிபா கூறியுள்ளது.
உலகக்கோப்பை போட்டிகளில்
பயன்படுத்தப்படும் பந்துகளுக்கு பிரேசுக்கா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஆடுகளத்தில் நடக்கும் நிகழ்வுகளை 360 டிகிரி கோணத்தில் காண்பதற்கு
அதில்பொருத்தப்பட்ட ஆறு கேமிராக்கள் உதவும். பிரேசில் மக்கள் வர்ணிக்க
முடியாத கால்பந்து பிரியர்கள் ஆவர். இந்தப் பந்தை தயாரித்துள்ள அடிடாஸ்
பிரேசில் மக்களைக் கவரும் அனைத்து அம்சங்களையும் இந்த பந்தில் இணைக்க
முயன்று வெற்றியும் பெற்றுள்ளனர்.
பிரேசில் கால்பந்தின் மெக்கா என்று
அழைக்கப்படுகிறது. அதனோடு இணைந்த துடிப்பு, நளினம், உற்சாகம், பெருமை,
மரியாதை ஆகிய அனைத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இந்தப் பந்தில் நீலம்,
ஆரஞ்சு, பச்சை ஆகிய வண்ணங்கள் பூசப்பட்டிருக்கும். கடந்த இரண்டரை ஆண்டுகளாக
இந்த பந்து பலவித சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பந்து காற்றில் மிதந்து
கைவீச்சை விட்டு விலகிச் செல்லாது என்று ஏரோடைனமிக்ஸ் நிபுணர்கள்
கூறுகின்றனர். இந்தப் பந்தின் எடை 437 கிராம் ஆகும். இந்தப்பந்தின் ஈரத்தை
உள்வாங்கும் திறன் வெறும் 0.2 விழுக்காடுதான்.
எவ்வளவு மழை பெய்தாலும் இதன் வடிவம், கனபரிமாணம் மற்றும் எடை ஆகியவை பாதிக்கப்படாது என்று கூறப்படுகிறது.


0 Comments