Subscribe Us

header ads

நாங்கள் நிறுத்தியிருக்கின்றோம் நீங்களும் நிறுத்துங்கள்- ஞானசார தேரர் வேண்டுகோள்

கௌதம புத்தர் அப்புலிமாலவுக்கு சொன்னது போன்று நாங்கள் நிறுத்தியிருக்கின்றோம். நீங்களும் நிறுத்துங்கள் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று வேண்டுகோள் விடுத்தார்.
அளுத்கம, தர்கா நகர் மற்றும் பேருவளை போன்ற இடங்களில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலும் தற்பொழுது நாட்டில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலும், தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க கூட்டப்பட்ட விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வன்முறைச் சம்பவங்களின் போது எதிர்க் கட்சிகள் களத்தில் இறங்கி தமது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன. ரணில் விக்கிரமசிங்க தற்பொழுது ஜனாதிபதியாகிவிட்டார் என்ற நினைப்பில் இருக்கின்றார். ஜே.வி.பி. வீதியில் இறங்கி துண்டுப் பிரசுரம் பகிர்ந்து வருகின்றது. என்னைக் கைது செய்யுமாறு பல்வேறு தரப்பிலும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
தயவு செய்து வாய்ப் பேச்சுக்களுக்கு அகப்பட்டு விடவேண்டாம் என நாம்  மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் தேரர் மேலும் கூறினார். 

Post a Comment

0 Comments