கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள முன்னணி முஸ்லீம் வர்த்தக நிலையம் ஒன்று இரண்டு சந்தேகத்திற்கிடமான நபர்களினால் இன்று புகைப்படம் பிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புகைப்படம் பிடித்த சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த வர்த்தக நிலையம் முஸ்லிம் நபருக்கு சொந்தமானதா என்று அருகில் உள்ளவர்களிடம் விசாரித்ததாக நவமணி பத்திரிக்கை டுவிட்டர் (Twitter) குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளது.
முஸ்லீம் சொந்தமான கடைகளில் திடீர் என ஏற்படும் தீ பரவும் தற்போதைய போக்கு நாடு முழுவதும் உள்ள முஸ்லீம்வர்த்தகர்கள் மத்தியில் ஒரு பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இவ்வாறன தீவைப்பு சம்பவங்களை தீவிரவாத அமைப்புக்களின் போர்வையில்யாரும் எதையும் செய்ய முடியும் என்ற ஒரு நிலையை உருவாக்கி இருக்கின்றது என சில முஸ்லீம் வர்த்தகர்கள்நம்புகின்றனர்.
கொள்ளுப்பிட்டி முஸ்லீம் வர்த்தக படப்பிடிப்பு சம்பவம் தொடர்பாக வர்த்தக நிலைய நிர்வாகத்தால் பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இந்த சம்பவம் பாணந்துறை உள்ள ‘No Limit’ வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ நிகழ்வின் பின் ஒரே ஒரு மணி இடைவெளியில்நடந்துள்ளது.

0 Comments