Subscribe Us

புத்தளம் மாவட்ட சர்வ மதத் தலைவர்களின் அறிக்கை

Hisham Hussain TPT



புத்தளம் பிரதேச செயலகத்தில் 2014.06.19 ஆம் திகதி பி.ப. 4.00 மணிக்கு புத்தளம் மாவட்ட சர்வ மதத் தலைவர்களின் மாநாடு நடைபெற்றது. இம் மாநாட்டில் புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம். மலிக், புத்தளம் பெரியள்ளி நிருவாக தலைவர் எஸ்.ஆர்.எம். முஸம்மில் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.
தமிழ், சிங்கள மொழிமூல அச்சு மற்றும் இலத்திரணியல் (டிவீ) ஊடக நிறுவனங்களுக்கு செய்தியாளர்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட இம் மாநாட்டில் வெளியிட்ட ஊடக அறிக்கை கீழ் வழங்கப்படுகின்றது.

___________________

தேசிய ஒற்றுமைக்கான சர்வமத குழு - புத்தளம்
2014.06.19
அளுத்கம, பேருவளை அமைதியின்மைக்கு அதிருப்தியை வெளியிடல்
கடந்த 2014.06.15 ஆம் தேதியும் அதன் பின்னரும் அளுத்கம, தர்கா நகர், வேருவளை உள்ளிட்ட இன்னும் பல பிரதேசங்களில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் குழப்ப செயற்பாடுகளை புத்தளம் சர்வ மத குழு வன்மையாகக் கண்டிக்கிறதெனவும், அவ்வாறான நிலை காரணமாக வேதனைக்குள்ளான சகோதர மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பாகவும் எமது ஆழ்ந்த சோகத்தையும், வேதனையையும் வெளிப்படுத்துவதாக நாம் இத்தால் வெளிப்படுத்துகிறோம்.
இந்த நிகழ்வுகள் தேசிய இனங்களுக்கிடையில் துவேச உணர்வையும், குரோதத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், அது நாட்டின் நற்பெயருக்கும் சகஜ வாழ்வுக்கும் பாரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதெனவும் நாம் அபிப்பிராயப்படுகின்றோம். இதன் பின்னர் இது போன்ற செயற்பாடுகள் ஏற்படாதிருக்க இந்த குழப்ப செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள், அதற்கு உறுதுணைபுரிந்தவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி ஆகக் கூடிய தண்டனையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என நாம் தெரிவித்துக் கொள்கின்றோம்.
03 தசாப்த காலமாக தொடர்ந்த கோர யுத்தம் காரணமாக இந்த நாட்டின் வளங்கள் நாசமாக்கப்பட்டன. அவ்வாறே சர்வதேச மட்டததில் எமது நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்பட்டது. யுத்தத்தில் வெற்றியும், சுதந்திரமும் பெற்ற எம்மை மீண்டும் அவ்வாறான நிலைக்கு இட்டுச் செல்லும் செயற்பாடாகும்.
இவ்வாறான நிலைமைகளில் மக்கள் சட்டத்துக்கு கௌரவமளித்து சட்டத்தை மீறாமல் பொறுமையுடனும் புத்தி சாதுர்யத்துடனும் இருப்பார்கள் என நாம் ஆழமாக நம்புகிறோம்.
அவ்வாறே, அது போன்ற சம்பவங்களில்
1. மத, வணக்க வழிபாட்டுத் தளங்களுக்கு அறிவூட்டல்
2.. அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறியத் தரல் அனைவரினதும கடப்பாடாகும.

இவ்வண்ணம்,
வண. தெல்வதுரே விபஸ்ஸி தேரர் (கையொப்பம்)
புத்தளம் பௌத்த சாசன அதிகா அமைப்பின் பதிவாளரும்
புத்தளம் மாவட்ட மூன்று நிக்காயாக்களினதும் அதிகார அமைப்பின் பிரதி பதிவாளரும்

கௌரவ வீ. சுந்தரராமன் குருக்கள் (கையொப்பம்)
ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், புத்தளம்

கௌரவ விராஜ் எரங்க அருட் தந்தை (கையொப்பம்)
புனித மரியாள் தேவாலயம், புத்தளம்

கௌரவ அப்துல்லா மஹ்மூத் ஆலிம் (கையொப்பம்)
தலைவர் புத்தளம் மாவட்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அமைப்பு



Post a Comment

0 Comments