Subscribe Us

header ads

பதுளையில் ஜனாதிபதி முஸ்லிம் அமைச்சர்கள் சந்திப்பில் பல் வேறு தீர்மானங்கள்

கடுமையான பாதுகாப்பு நடவடிக்கையினை மேற் கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச பொலிஸ் மா அதிபருக்கு இன்று(21.6.2014)பதுளையில் நடை பெற்ற முஸ்லிம் அமைச்சர்களுடனான சந்திப்பின் போது பணிப்புரை வழங்கியுள்ளார்.இன்று (21.6.2014)சனிக்கிழமை பதுளையில் முஸ்லிம் அமைச்சர்களை ஜனாதிபதி மஹிந்தராஜபகச் அவசரமாக சந்தித்தார்.இந்த சந்திப்பில் முஸ்லிம் அமைச்சர்களான றஊப் ஹக்கீம், ஏ.எச்.எம்.பௌஸி, றிசாட் பதியுதீன், ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், பசீர் சேகுதாவூத், பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பைசர் முஸ்தபா ஆகியோரும் மற்றும் அமைச்சர்களான பசில் ராஜபக்ச மற்றும் டளஸ் அழகப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், உட்பட பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு இன்று முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள், இன்று பானந்துறையில் இடம் பெற்ற நோ லிமிட்டின் மீதான தீ வைப்புச் சம்பவம் உள்ளிட்ட பல் வேறு விடயங்களையும் மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.இதன் போது பல் வேறு விடங்கள் பற்றிய கலந்துரையாடலும் இடம் பெற்றுள்ளது.
இறுதியில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விஸேட செய்தியொன்றை கூறுதல், யாராக இருந்தாலும் ஒரு இனத்தை தாக்கி பேசுவதை கண்டிப்பாக நிறுத்துதல், மிக கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பொலிஸ் மா அதிபர் ஏற்படுத்தல், ஒவ்வொரு வாரமும் அமைச்சர் பசில் ராஜபகசவின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபே ராஜபக்சவின் பங்கு பற்றுதலுடன் சந்திப்பை ஏற்படுத்தி அந்த வாரத்தில் இடம் பெற்றுள்ள விடயங்கள் பற்றி ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற் கொள்ளல்போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments