Subscribe Us

header ads

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் சர் விண்ஸ்டன் சர்ச்சிலின் மகள் காலமானார்

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ’சர்’ விண்ஸ்டன் சர்ச்சில்-லின் மகளான சீமாட்டி மேரி சோமெஸ் நேற்று மரணம் அடைந்தார்.

விண்ஸ்டன் சர்ச்சில்- கிளெமெண்ட்டைன் சர்ச்சில் தம்பதியரின் ஐந்தாவது (கடைசி) மகளான இவர், இரண்டாம் உலகப் போரின் போது 17 வயது இளம் பெண்ணாக இருந்தார்.

பின்னர், 1939- 1941ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் செஞ்சிலுவை சங்கம், தன்னார்வ பெண்கள் சேவை நிறுவனம் ஆகியவற்றில் தொண்டாற்றிய சீமாட்டி மேரி சோமெஸ் 1947-ம் ஆண்டு பரோன் கிரிஸ்டோபர் சோமெஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியருக்கு 5 குழந்தைகள் பிறந்தன. 1979-ம் ஆண்டு தனது தாயார் கிளெமெண்ட்டைன் சர்ச்சிலின் வாழ்க்கை வரலாற்றை இவர் புத்தகமாக எழுதி பதிப்பித்தார். 1987-ம் ஆண்டு கணவர் பரோன் கிரிஸ்டோபர் சோமெஸ் இறந்த பின்னர் சில உயர் பொறுப்புகளை வகித்த இவரது மகன்களில் ஒருவரான நிக்கோலஸ் சோமெஸ் தற்போது இங்கிலாந்து பாராளுமன்றத்தின் பழமைவாத கட்சி எம்.பி.யாக பதவி வகிக்கிறார்.

சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த சீமாட்டி மேரி சோமெஸ், தனது 91ம் வயதில் நேற்று காலமானார். குடும்பத்தார் அனைவரும் சூழ்ந்திருக்க (உள்ளூர் நேரப்படி) ஞாயிற்றுக்கிழமை மாலை அவரது உயிர் அமைதியாக பிரிந்தது என்று அவரது மகன் நிக்கோலஸ் சோமெஸ் அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments