காற்றோட்டங்கள் ஒரே இடத்தை நோக்கி
வீசுவதால் 100 மில்லிமீற்றரிலும் கூடிய கடும் மழை அல்லது இடியுடன் கூடிய
மழை கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில்
பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.இந்த நிலையில், மின்னல் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் பொதுமக்களை அந்தத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் மாலை வேளைகளிலும் ஊவா, வடமத்திய மாகாணங்களில் இடி, மின்னலுடன்; மழை பெய்யும்.
சிலாபம், மன்னார், காங்கேசந்துறை, திருகோணமலை வரையான கடற்பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 55 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும் இதனால், மீனவர்கள் அவதானமாகச் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

0 Comments