Subscribe Us

நாட்டின் சமாதானத்துக்காக முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்ய தயார். (எனது மனைவி கோபித்துகொண்டாலும் பரவாயில்லை)

மக்கள தொடர்பாடல் அமைச்சர் மெர்வின் சில்வா நேற்று களனி பிரதேச செயளகத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார் இதன் போது அங்கு கருத்து வெளியிட்ட அவர் தேசிய நல்லினக்கத்தை ஏற்படுத்த தான் ஒரு முஸ்லிம் பெண்ணை திருமனம் செய்துகொள்ள தயார் என தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நவனீதம்பிள்ளை அவர்களை திருமணம் செய்ய விரும்புவதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்திய அமைச்சர் தற்போது இப்படியான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர் முஸ்லிம்கள் எமக்கு அவர்களின் பெண்களை மணம்செய்து தருவதில்லை ஆனால் எமது பெண்களை மனம்முடிக்கிறார்கள் நாம் முஸ்லீம்களிடம் கேட்பது உங்கள் பெண்களி எமக்கு மணம்முடித்து தாருங்கள்.
எனது மனைவி கோபித்துகொண்டாலும் பரவாயில்லை நான் ஓரு முஸ்லிம் பெண்ணை மணம்முடிக்க தயார்.
அப்போது எனக்கும் முகத்தை மூடிக்கொண்டு பிரச்சினைக்கு சரி (கோரியகட ஹரி) போக முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments