ஜிஹாத் குழுக்களுக்கு உயிர் கொடுத்து இந்த நாட்டிலுள்ள சிங்கள பௌத்தர்களைப் பயங்காட்டலாம் என முஸ்லிம் அடிப்படைவாதிகள் நினைக்கக் கூடாது என ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இன்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அளுத்கமயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 57 பெட்ரோல் குண்டுகளும், மூன்று முஸ்லிம் அடிப்படைவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் அல்கெய்தா உறுப்பினர்கள்.
இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு கடையடைப்பு செய்ய இடம்கொடுத்தமை மிகவும் கவலைக்குரிய விடயம். இவ்வாறு கடையடைப்புச் செய்து அடிப்படைவாதிகளுக்கு உயிர் கொடுக்க முற்படுகின்றனர் எனவும் அமைச்சர் இதன் போது குற்றம்சாட்டினார்.
அளுத்கமை விவகாரத்தை தலை கீழாக புறட்டி செய்திகளை திரிபு படுத்தும் நரித்தனத்தில் தற்போது இனவாதிகள் களம் இறங்கியுள்ளனர். தாக்கப்பட்ட முஸ்லிம்களையே தீவிரவாதிகளாக சித்தரிக்கும் கொடூரத்தை தற்போது பொருப்பான பதவியில் அமைச்சராக இருக்கும் சம்பிக்க போன்றவர்கள் தெரிவிப்பதானது நீதி இந்நாட்டில் செத்துவிட்டது என்தனையே எடுத்துக்க காட்டுகின்றது


1 Comments
இந்த ஓனாய் வாயில் வந்தையெல்லாம் உளறும். இதுகள் ஊட்டி வளர்த்ததுதான் பொது பலு சேனா. இந்த சம்பிக மின்சார அமைச்சரா இருந்த போது தலை மன்னாருக்கு மேற்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் எண்ணெய் ட்ச்க்; இருப்பதாகவும். அது சீக்கிரமே கண்டுபிடிக்கப்படும் என்றும் வாய் உளறினான்.. சிறிது நாளிலே மின்சார அமைச்ஸ்ரீ பதவி போச்சு. இவன், உதய கம்மன்பில, விமல் வீரவங்ஸ எல்லோரும் பெரிய மேதாவிகளாட்டம் கதைப்பார்கள். நரகத்தின் விறகுகளாகவும் இருக்கலாம். சகலதையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே..... ஸுபஹானல்லாஹ்.
ReplyDelete