Subscribe Us

ஹிஜாfப் அணிந்த பெண்கள் குவியும் ஐரோப்பிய பாராளுமன்றம்

(Hisham Hussain, Puttalam)
கிரீஸ் நாட்டைத் தொடர்ந்து ஸ்லொவீனியா (Slovenia)வும் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்ணை, மே 25 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் ஸ்லொவீனியாவின் Social Liberal Party கட்சியின் வேட்பாளராக நியமித்து அனுப்பிவைக்கின்றது.

பெண்ணுரிமைப் போராளியான, பொஸ்னிய வம்சாவளியைச் சேர்ந்த பயிலா பாசிக் பிசிக் (Faila Pasic Bisic) குடிவரவு, வேலையின்மை, இன மற்றும் சமய சிறுபான்மையினரின் விவகாரங்களில் அக்கறையுடன் செயல்படுகின்றார்.
கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஆன்னா ஸ்டாமோ மேற்படி ஐரோப்பிய பாராளுமன்ற வேட்பாளராக நியமிக்கப்பட்ட முதலாவது ஹிஜாப் அணிந்த பிரதிநிதியாவாள்.

2 மில்லியன் மக்கள் வாழும் ஸ்லொவீனியாவில் முஸ்லிம்கள் சுமார் 50,000 (சனத்தொகையில் 2.4%) ஆகும். எனினும் முஸ்லிம் தரப்பினர் இது 80,000 ஆகுமெனக் கூறுகின்றனர். இரண்டாவது சமயமாக இஸ்லாம் காணப்படுகின்றது.

1991 ஜூன் 21 ஆம் திகதி யுகோஸ்லேவியா (Yugoslavia)விலிருந்து சுதந்திரம் பெற்ற ஸ்லொவீனியா 20,273 சதுர கிமீ. பரப்பளவுகொண்ட சிறியதொரு நாடு ஆகும் (இலங்கை 65,610 ச.கிமீ. என்பதைக் கவனத்திற்கொள்க).

நன்றி:  The Puttalam Times

Post a Comment

0 Comments