Subscribe Us

header ads

கார் ஓட்டுவதை செல்போனில் படம்பிடித்து கணவருக்கு அனுப்பிய சவுதி பெண். இது அவருக்கே எதிர்வினையாக முடிந்த சம்பவம்.

-Imran Sls-
சவூதி அரேபியா பெண்கள் வாகனம் செலுத்துவதை முற்றாக
தடைசெய்துள்ளது ஆனால் அதையும் மீறி தனது கணவருக்கே தெரியாமல் இங்கு வசித்துவரும் பெண் ஒருவர் தான் கார் ஓட்டுவதை தனது செல்போனில் படம்பிடித்து அவரது கணவருக்கு அனுப்பி அவரை ஆச்சரியப்படுத்த விரும்பினார்.
ஆனால் இந்த செயல் அவருக்கே எதிர்வினையாக முடிந்துவிடும் என்பது அவரே எதிர்பார்க்காத ஒரு திருப்பமாக அமைந்துவிட்டது. தான் கார் ஓட்டுவதை வீடியோவாக எடுத்த அந்தப் பெண் அதனைத் தனது கணவரின் மொபைல் போனுக்கு அனுப்பியிருந்தார்.
அதனைப் பார்த்து வியக்கும் கணவர் தன்னைப் பாராட்டுவார் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் தன்னிடம் முன்கூட்டி இதுபற்றி ஏதும் தெரிவிக்காமல் தனது மனைவி செய்த செயல் அரசின் விதிமுறைகளை மீறுவதாக உள்ளதை அந்தக் கணவர் பெரிதாக எண்ணினார்.
இதன்விளைவாக தங்களது மணவாழ்வை முறித்துக்கொள்ளுவதாக தெரிவித்து தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரியுள்ளார். அண்மையில் இதே போன்று பெண்ணொருவர் செலுத்திய கார் தனது கட்டுப்பாடை இழந்து விபத்துக்குள்ளானதில் ஸ்தலத்திலேயே அப்பெண் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Thanks : Madawalanews

Post a Comment

0 Comments