Hisham Hussain, Puttalam
ஐரோப்பிய பாராளுமன்ற European Parliament (EP) தேர்தலில்
போட்டியிடுவதற்காக, அதன் வரலாற்றில் முதன் முறையாக ஹிஜாப் அணிந்த முஸ்லிம்
பெண்ணை தமது நாட்டின் வேட்பாளராக கிரீஸ் நாடு (Greece) நியமித்துள்ளது.
சமய சிறுபான்மைக்கு சமத்துவம், பாகுபாடு இன்மை மற்றும்
முஸ்லிம்-எதிர்ப்புவாதத்தை தவிர்க்கும் நோக்கில் ஆன்னா ஸ்டாமோ (Anna
Stamou) வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாள்.
ஐரோப்பிய பசுமைக்
கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் கிரீஸ் நாட்டின் சூழல்நேயக் கட்சியான Eco
Green Party Greece ஆன்னாவை வேட்பாளராகக் களமிறக்கியது.
வர்த்தக
முகாமைத்துவ பட்டதாரியும் சிலகாலம் பிரபலமான யோகா ஆசிரியையாகவும் விளங்கிய
ஆன்னா, தனது 30 ஆம் வயதில் இஸ்லாத்தைத் தழுவிய பின் சமூகப் பணிகளில்
ஈடுபாட்டுடன் பங்களிப்பு செய்து அரசியலிலும் காலடிவைத்தார்.
மே 25
ஆம் திகதி நடைபெறும் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கான தேர்தலில் ஆன்னா
தெரிவுசெய்யப்பட்டால், ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஹிஜாப் அணிந்த முதலாவது
உறுப்பினர் என்ற வரலாற்றை ஆன்னா ஆரம்பித்து வைப்பார்.
10.7 மில்லியன் கிரீஸ் நாட்டு சனத்தொகையில் முஸ்லிம்கள் 1.3 % வீதத்தினர் ஆவர்.


0 Comments