Subscribe Us

header ads

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக விஷேட சந்திப்பு.

எதிர்கட்சி தலைவர் ரனில் விக்ரமசிங்க மற்றும் ஜனநாயக மக்கள் கட்சியின் தலைவருக்கும் இடையிலான விஷேட சந்திப்பொன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாகவே இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இவ்விசேட சந்திப்பின் பின்னர் ஊடகத்துக்கு கருத்து தெரிவித்த ஜனநாயக மக்கள் கட்சியின் தலைவர் மனே கனேசன் வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாக எதிர்கட்சி தலைவருடன் தாம் கலந்துரையாடியதாக குறிப்பிட்ட அதேவேளை தாம் இவ்விடயம் தொடர்பாக முன்னதாக ஜே வீ பி தலைவர் அனுர குமார திசானாயக மற்றும் ஜனநாயக சுதந்திர முன்னனி தலைவர் சரத்பொன்சேகா ஆகியோரை சந்தித்து பேசிய‌போது அவர்கள் கூறிய விடயங்கள் தொடர்பாகவும் எதிர்கட்சி தலைவருக்கு தெளிவுபடுத்தியதாகவும் இப்பயனத்தில் தமிழ் அரசு கட்சியையும் இணைத்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் அரசின் பங்காளிக்கட்சியான முஸ்லிம் காங்கிரசுடனும் உத்தியோகபூர்வமற்ற மட்ட போச்சுவார்தைகள் நடைபெறுவதாக தெரிவிதுள்ளமை குறிப்பிடத்த‌க்கது. 

Post a Comment

0 Comments