Mohammad Mushi
முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் மிகப் பெரிய ஆயுதம் வாக்குரிமையாகும். இலங்கை
முஸ்லிம்களைப் பொறுத்தவரையல் 100 வீதம் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும். இதற்கு தம்மை வாக்காளர்களாப் பதிவு செய்து கொள்வது அவசியமாகும்.
கடந்த காலங்களில் முஸ்லிம்களின் வாக்கு வீதம் குறைந்திருந்தனை அவதானித்தோம். வாக்கு வீதம் குறையும்போது பிரதிநிதிகளை முறையாகக் கொண்டுவர முடியாமல் போகின்றது. எனவே, வாக்காளர்களாகப் பதிந்து கொள்வது தொடர்பாக அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
அதற்கான அரியதோர் சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது. ஜூன் முதலாம் திகதி வாக்காளர் பதிவுத் தினமாக தேர்தல் திணைக்களம் பிரகடனப்படுத்தியுள்ளது.ஜூன் மாதம் 15 ஆம் திகதி வரை வாக்காளர் பதிவுகள் இடம் பெற உள்ளன.
இதேவேளை 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள்,வாலிபர்கள்,வயோதிபர்கள்,நிரந்தர அல்லது தற்காலிக (கூலி வீடு) முகவரியில் வசிப்போர் மற்றும் வெளிநாடுகளில் வசிப்போர் என அனைவரும் கட்டாயம் தமது வாக்குரிமையை பதிவு செய்து கொள்ளும்படி தேசிய ஷூரா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
எனவே புத்தளம் மாவட்ட வாக்காளர்கள் குறிப்பாக முஸ்லிம் தமிழ் வாக்காளர்கள் இது விடயத்தில் அதிக அக்கறை எடுக்க வேண்டும். சமய,சிவில் சமூக அமைப்புக்கள் இதற்கான விரிவான வேலைத் திட்டமொன்றை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.


0 Comments