இணைந்த சுகாதார பட்டப்படிப்பிற்கான நான்கு வருடகால எல்லையை மூன்றுவருட காலமாக குறைத்தமைக்கு எதிராக மேற்படி பட்டப்படிப்பு மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் சத்தியாகிரகப் போராட்டம் நேற்றைய தினத்துடன் 150 நாட்களை கடந்துவிட்டது.
இந்தநிலையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் எந்தவித தீர்வும் முன்வைக்கப்படவில்லை. இதனை கண்டித்து சத்தியாகிரக பேராட்டத்திற்கு ஆதரவாக பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் மாணவர்களும் விதிக்கிறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் போரதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரும் தொகையான மாணவர்கள் கலந்துகொண்ட இவ் ஆர்ப்பாட்டம் கண்டி கலஹாசந்தியில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

0 Comments