ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவங்சவுக்கும் இடையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போது நாட்டின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது என்று ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது தேசிய சுதந்திர முன்னணியின் 12 யோசனைகளும் ஜனாதிபதியிடம் அமைச்சர் விமல் வீரவங்சவினால் கையளிக்கப்பட்டது.
இச்சந்திப்பின் போது அமைச்சர்களான சுசில் பிரேமச்சந்திரன் மற்றும் டளஸ் அழகபெரும ஆகிய இருவரும், தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்களான பிரதியமைச்சர் வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜயநாயக்க, எம்.முஸ்ஸமில் ஆகியோரும் உடனிருந்தனர்.
இந்த யோசனைகள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் அதுதொடர்பில் கருத்துரைப்பதாகவும் பொருளாதார ரீதியாவும் சரி அரசியல் ரீதியாகவும் சரி தீர்மானங்களை எடுக்கின்ற போது நான் ஒருபோதும் பின்நிற்கமாட்டேன் என்று ஜனாதிபதி தெரிவித்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments